மலேசியாவின் 146 வயது இரப்பர் மரத்தின் மதிப்பு சுமார் இரண்டு இலட்சமாம்

மலேசியாவின் மிகப்பழைமையான இரப்பர் மரம் குவாலா கங்சாரில் உள்ளது. இதற்கு தற்போது 146 வயதாகிறது என்றும், தற்போது அதன் மதிப்பு கிட்டத்தட்ட RM200,000 என்று கூறப்படுகிறது.

Hevea brasiliensis என்ற அறிவியல் பெயர் கொண்ட இந்த இறப்பர் மரத்தின் பராமரிப்பு செலவுகள் வருடாந்திர RM3,000 மற்றும் RM5,000 இடையே தேவைப்படுகிறது என்று, குவாலா கங்சார் நகராட்சி மன்றத்தின் (MPKK) செயலாளர் சைபுல் அஸ்லி முஹமட் நோர் கூறினார்.

“இந்த இரப்பர் மரத்தின் தற்போதைய மதிப்பு RM194,183. இந்த இரப்பர் மரமானது குவாலா கங்சார் நகராட்சி மன்றத்தின் பாரம்பரிய மரங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது என்றார்.

1877 ஆம் ஆண்டில், இங்கிலாந்தின் கியூ கார்டனில் இருந்து மொத்தம் 22 இரப்பர் நாற்றுகள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டன. 22 நாற்றுகளில் ஒன்பது குவாலா கங்சாரில் விதைக்கப்பட்டது.

இரப்பர் மரத்தின் ஆயுட்காலம் குறித்து கேட்டபோது, அதை மதிப்பிட முடியாது என்று சைபுல் அஸ்லி கூறினார். “இருப்பினும், இந்த ரப்பர் மரத்தின் ஆயுளை தக்கவைக்க நாங்கள் முயற்சித்து வருகிறோம், அதற்கு தகுந்த பராமரிப்பு அளித்து வருகிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here