கடன் அட்டைகளை மறுசுழற்சி செய்ய மாஸ்டர்கார்ட் நிறுவனம் திட்டம்

லண்டன்:

கட்டணச் சேவை வழங்கும் நிறுவனமான ‘மாஸ்டர்கார்ட்’ கடனட்டையையும் பற்று அட்டையையும் மறுசுழற்சி செய்யும் திட்டத்தை புதன்கிழமை தொடங்கியது.

இத்திட்டத்தின்படி மாஸ்டர்கார்ட் நிறுவனம் 10,000 அட்டைகளைச் சிதைக்கும் திறன்கொண்ட ஓர் இயந்திரத்தை ‘HSBC’ வங்கிக்கு வழங்கும். அந்த இயந்திரம் நிரம்பிய பிறகு, அதில் இருக்கும் அட்டைகள் நெகிழி மறுசுழற்சி செய்யும் இடத்திற்கு மாற்றப்படும்.

இதன்மூலம் புழக்கத்தில் உள்ள பயன்பாடு இல்லாத மில்லியன்கணக்கான அட்டைகளை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தலாம். மேலும், அவை மண்ணில் சேர்வதையும் தவிர்க்க முடியும் என்றும் அது தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here