பீப்பாய்களில் எரிபொருள் நிரப்பிய இரு சிங்கப்பூரர்களை கண்டித்த உணவு விநியோகிஸ்தரின் கணக்கை மீண்டும் செயல்படுத்தியது Grab

ஜோகூரில் பீப்பாய்களைப் பயன்படுத்தி எரிபொருள் நிரப்பிய இரு சிங்கப்பூரர்களை கண்டித்த உணவு விநியோகிஸ்தரின் கணக்கினை முடக்கிய கிராப் ஹோல்டிங்ஸ் நிறுவனம், அவரின் உணவு விநியோகக் கணக்கை மீண்டும் செயல்படுத்தியது.

இது தொடர்பில் கிராப் ஹோல்டிங் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், குறித்த சம்பவம் தொடர்பில் வைரலான வீடியோவை தாம் அறிந்திருப்பதாகவும், அது தொடர்பில் விரிவான விசாரணையை நடத்தியதாகவும் கூறியது.

எங்கள் SOP (நிலையான செயல்பாட்டு நடைமுறை) அடிப்படையில், அவரது கணக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது, இருப்பினும் முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட்ட பிறகு கணக்கு மீண்டும் செயல்படுத்தப்பட்டது,” என்று அவ்வறிக்கையில் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஜோகூர், இஸ்கண்டார் புத்திரி, சன்வே பாக்ஸ் அருகே உள்ள பெட்ரோல் நிலையத்தில் பீப்பாய்க்கு எரிபொருளை நிரப்புவதாகக் கூறப்படும் சிங்கப்பூரர்கள் இருவரை கண்டித்ததால், Grab தனது கணக்கை இடைநிறுத்தப்பட்டதாகக் கூறி, matkibot என்ற டிக் டாக் கணக்கின் மூலம் வெளியிட்டுள்ள ஒரு காணொலியில் ஒருவர் தெரிவித்திருந்தார் எனப்து குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here