கேடிலான் ராக்யாட் கட்சியின் (PKR) ஒப்பந்தத்தை மீறியதற்காக, அக்கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் டத்தோ ஜுரைடா கமாருதின், PKR-க்கு 10 மில்லியன் ரிங்கிட் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கில் கட்சியின் பிணை பத்திரம் செல்லுபடியாகும் என்றும் கட்சியின் வலுவான விதிமுறை ஒப்பந்தம் என்பதைக் கண்டறிந்த பின்னர், நீதிபதி டத்தோ அக்தர் தாஹிர் இந்த தீர்ப்பை வழங்கினார்.
மேலும் இந்த வழக்கின் செலவுக்காக 50,000 ரிங்கிட் செலுத்துமாறும் ஜுரைடாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த செப்டம்பர் 28, 2020 அன்று, ஜூரைடா நிர்ணயித்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் RM10 மில்லியன் பத்திரத்தில் கையெழுத்திட்டதாகவும், 2020 ஆம் ஆண்டு sheraton நடவடிக்கையில் ஈடுபட்டதன் மூலம் அவர் கட்சி ஒப்பந்தத்தை மீறியதாகவும், கட்சிக்கு துரோகம் இழைத்ததாகவும் கூறி, PKR பொதுச்செயலாளர் டத்தோ சைபுடின் நசுஷன் இஸ்மாயில், ஜூரைடாவிடம் இருந்து 10 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கேட்டு வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.









