பாரீஸ்:
பிரான்சை சேர்ந்த லி டொமினிக் என்பவர் தினமும் இரவில் மனைவி பிரான்சுவாவுக்கு போதை மருந்து கொடுத்து பல ஆண்களுக்கு விருந்தாக்கி உள்ளார்.
மனைவிக்கு சந்தேகம் வராமல் டொமினிக் 10 ஆண்டுகளாக இந்தக் கொடுமையைத் செய்து உள்ளார். 91 முறை அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார், இதில் அதிர்ச்சி தரும் சம்பவம் யாதெனில் இவை அனைத்தையும் அவரின் கணவர் வீடியோ எடுத்து வைத்து உள்ளார்.
மனைவி சுயநினைவை இழக்கும் வகையில், அவர் மனைவிக்கு உணவில் லோரஸெபம் என்ற மருந்தை கலந்து கொடுத்து உள்ளார்.
தெற்கு பிரான்சில் உள்ள அவிக்னான் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இந்த குற்ற செயலில் 83 பேரை ஈடுபடுத்தி உள்ளார். இவர்கள் 26 முதல் 73 வயதுக்கு உட்பட்டவர்கள் என கண்டறியப்பட்டு உள்ளது. 83 பேரில் 51 பேரை கைது செய்து உள்ள போலீசார் அவர்கள் மீது 92 வழக்குகளை பதிவு செய்து உள்ளனர். மற்றவர்களை அடையாளம் காணமுடியவில்லை.
குற்றவாளிகளில் தீயணைப்பு வீரர், லாரி டிரைவர், நகராட்சி கவுன்சிலர், வங்கி ஊழியர், ஐடி ஊழியர், சிறைக்காவலர், செவிலியர் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்ளனர்.
விபசாரத்திற்கு வாடிக்கையாளர்களை அழைத்து வந்த கணவர் புகையிலை மற்றும் வாசனை திரவியம் போன்ற பொருட்களை பயன்படுத்த கூடாது என்ற கட்டளையையும் போட்டுள்ளார் என விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், வீட்டிற்கு வரும் ஆண்கள் குளியலறையில் ஆடைகளை அவிழ்ப்பதற்கு பதிலாக சமையலறையில் ஆடைகளை அவிழ்க்கச் சொல்வார். மனைவியின் அறைக்குச் செல்வதற்கு முன்பு வெந்நீரில் கைகளைக் கழுவிக்கொள்ள வேண்டும் என கூறி உள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர், இப்படி நடப்பது தங்களுக்குத் தெரியாது என்றும், சிலர் அவருடைய மனைவி தான் என்று தெரியாது என கூறி உள்ளனர்.





















