மலாக்காவில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் எட்டு வெளிநாட்டவர்கள் கைது

சமூக ஊடகங்கள் மூலம் பாலியல் சேவை வழங்குவதாக நம்பப்படும் 8 வெளிநாட்டு பெண்கள் குடிநுழைவுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை (ஜூன் 23) இரவு 9.45 மணி முதல் சனிக்கிழமை (ஜூன் 24) அதிகாலை 2 மணி வரை, தாமான் மலாக்கா ராயாவில் உள்ள பல பட்ஜெட் ஹோட்டல்களில் அதன் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது இந்த சட்டவிரோத நடவடிக்கை வெளிக்கொணரப்பட்டது என்று மாநில குடிவரவுத் துறை இயக்குநர் அனிர்வான் ஃபௌஸி முகமட் ஐனி கூறினார்.

ஆரம்ப விசாரணைகளில் அடிப்படையில், “பாலியல் சேவைகளை வழங்குவதற்காக ஒரு வாடிக்கையாளருக்கு RM230 முதல் RM270 வரை பெண்கள் கட்டணம் வசூலித்தனர்,” என்று அவர் கூறினார்.

கைது செய்யப்பட்டவர்கள் 27 மற்றும் 33 வயதுடைய ஐந்து வியட்நாம் மற்றும் மூன்று தாய்லாந்து நாட்டுப்பெண்கள் என்றும், நடவடிக்கையின்போது பெண்கள் கதவை திறக்க மறுத்ததால், 70 உறுப்பினர்களைக் கொண்ட தமது சோதனைக் குழு சில அறைக் கதவுகளை உடைத்துத் திறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றார்.

சந்தேக நபர்கள் குடிவரவு சட்டம் 1959/63 இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக அனிர்வான் ஃபௌஸி கூறினார். மேலும் குறித்த ஹோட்டலில் இருந்த ஐந்து உள்ளூர் ஆட்களும் விசாரணைக்கு உதவ அழைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here