மாநில சட்டசபை கலைப்பு தொடர்பில் கெடா சுல்தானை சந்திக்கிறார் சனுசி

கெடா சட்டசபை கலைப்பு தொடர்பில், கெடா சுல்தான் அல்-அமினுல் கரீம் சுல்தான் சல்லேஹுதீன் சுல்தான் பட்லிஷாவின் சம்மதம் பெறுவதற்காக கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முஹமட் சனுசி முஹமட் நோர் அவரை இன்று சந்திக்கிறார்.

வரும் ஜூன் 28 ஆம் தேதி மாநில சட்டசபையை கலைக்கும் வகையில், சம்மதம் பெற கெடா சுல்தானை சந்திப்பதாக சனுசி கடந்த வாரம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

எனவே அது தொடர்பில் மாநில பெரிகாத்தான் நேஷனல் தலைவரான சனுசி, கெடா சுல்தான் அலுவலகத்திற்கு இன்று காலை 10.22 மணியளவில் விஸ்மா தாருல் அமானுக்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கெடா மாநில சட்டப் பேரவையின் பதவிக்காலம் ஜூலை 4ஆம் தேதியுடன் முடிவடைகிறது என்பது நினைவுகூறத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here