யுனெஸ்கோவின் கீழ் உலக பாரம்பரிய தளமாக பட்டியலிட மலேசியாவின் ஏழு புதிய கிராமங்கள் பரிந்துரை

ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய தளங்களாக அறிவிக்க, நாடு முழுவதும் உள்ள ஏழு புதிய கிராமங்களை (கம்போங் பாரு) தேசிய பாரம்பரியத் துறை தேர்வு செய்துள்ளது.

பினாங்கு, பேராக், ஜோகூர், மலாக்கா மற்றும் சிலாங்கூர் உட்பட நாடு முழுவதும் உள்ள மொத்தம் 613 புதிய கிராமங்களில் இருந்து இந்த ஏழு கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக உள்ளாட்சி மேம்பாட்டு அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்தார்.

பினாங்கைச் சேர்ந்த கம்போங் பாரு பெராபிட் உடபட் ஏழு கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஏனையவை ஜென்ஜாரோம், கம்போங் பாரு ஜென்ஜாரோம், மலாக்காவிலுள்ள மசாப் உம்போ, பேராக்கிலுள்ள கம்போங் பாரு பாபான், ஜோகூரிலுள்ள சாஹா ஆகியவை நாட்டை பிரதிநிதித்து யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியத் தள அங்கீகாரத்தைப் பெற விண்ணப்பிக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளன,” என்று, நேற்று புக்கிட் மெர்தாஜாம், கம்போங் பாரு பெராபிட்டிற்கு உத்தியோகப் பூர்வ பயணம் மேற்கொண்டபோது ஙா கோர் மிங் அவ்வாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here