ஈப்போ போலீஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலகத்தில் தீ

ஈப்போ போலீஸ் தலைமையகத்தில் உள்ள குற்றப் புலனாய்வுத் துறை அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

சம்பவம் தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 27) மாலை 3.14 மணிக்கு அழைப்பு வந்ததாக,
பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுத் துணை இயக்குநர், சபரோட்ஸி நோர் அகமட் கூறினார்.

“போலீஸ் தலைமையக கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் அமைந்துள்ள குற்றப் புலனாய்வுத் துறை அலுவலகத்தில் தீ ஏற்பட்டிருந்தது.

“எங்கள் ஆரம்ப விசாரணையின் அடிப்படையில், குறைந்தபட்சம் 40 விழுக்காடு தீப்பிடித்தது.

“நாங்கள் இன்னும் தீயை அணைக்க முயற்சி செய்கிறோம்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here