பிரதமரது லாவோஸ் பயணம் இரு நாடுகளிடையேயான நட்பினை பலப்படுத்தும்

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களது லாவோஸ் பயணமானது, இரு நாடுகளுக்கு இடையே நட்பு மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தவும், வலுப்படுத்தவும் உதவும் என நம்பப்படுகிறது.

அடுத்த ஆண்டு இந்தோனேசியாவில் இருந்து ஆசியான் தலைவர் பதவியை லாவோஸ் ஏற்க இருக்கும் நிலையில், இந்த விஜயம் நேர்மறையான இரு தரப்பு உறவை உருவாக்க சிறந்த காலம் என்றார்.

“லாவோஸின் தலைவர்கள் மற்றும் முஸ்லிம் சமூகத்தை சந்திப்பதோடு, மலேசிய மதானியின் கொள்கைகள் மற்றும் அபிலாஷைகளை அவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக இந்த நாட்டில் வாழும் மலேசியர்களுடனும் ஒரு சந்திப்பை நடத்துவேன்” என்று பிரதமர் கூறினார்.

“இந்தப் பயணம் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் என்று நம்புகிறோம்,” என்று அவர் நேற்று பேஸ்புக் பதிவில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here