கெடாவில் இரண்டு கோவிட்-19 கிளஸ்டர்கள் கண்டறியப்பட்டன

அலோர் ஸ்டார்:

டந்த டிசம்பர் 17 முதல் டிசம்பர் 23 வரையிலான வாரத்தில் (ME 51 ) கெடாவில் மொத்தம் 1,313 கோவிட் -19 தொற்றுநோய் சம்பவங்கள் மற்றும் இரண்டு புதிய கிளஸ்டர்கள் பதிவாகியுள்ளன.

இந்த இரண்டு கிளஸ்டர்களும் கோல மூடாவில் உள்ள ஒரு தொழிற்சாலையிலும், கோத்தா ஸ்டாரில் உள்ள முதியோர் பராமரிப்பு மையத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளனதாக மாநிலத்தின் வீட்டுவசதி, உள்ளாட்சி மற்றும் சுகாதாரக் குழுவின் தலைவர், மேஜர் மன்சோர் ஜகாரியா தெரிவித்தார்.

“மேலும் ME51 வாரத்தில் ஒரு மரணம் பதிவாகியுள்ளது, அதே நேரத்தில் முந்தைய வாரத்தில் 3 இறப்புகள் பதிவானது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில், டிசம்பர் 1 முதல் ME51 வரையான காலப்பகுதி வரை கோவிட்-19 காரணமாக ஒன்பது இறப்புகள் பதிவாகியுள்ளன,” என்று அவர் கூறினார்.

முந்தைய நோய்த்தொற்று வாரங்களுடன் ஒப்பிடும்போது தொற்றுக்கள் எண்ணிக்கை 266 சம்பவங்கள் அல்லது 25.4 சதவீதம் அதிகரித்துள்ளது, இருப்பினும் பெரும்பாலான நோய்த்தொற்றுக்கள் லேசான அறிகுறிகளை மட்டுமே கொண்டிருந்தன என்றும் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் அவர்களின் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனர் என்றும் அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here