ஆப்பிரிக்க நாடான லிபியாவில் கடந்த 1969 முதல் 2011-ம் ஆண்டு வரை அதிபராக இருந்த முகமது கடாபி சர்வாதிகாரியாக செயல்பட்டார். பின்னர் இவருக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்து சொந்த ஊரான சிர்டேவில் புரட்சியாளர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.
இதனையடுத்து சிரியா-லெபனான் எல்லையில் பிடிபட்ட அவரது மகன் ஹன்னிவால் லெபனான் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முகமது கடாபியின் மகன் ஹன்னிவால் 2015-ம் ஆண்டு முதல் சிறையிலேயே உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இந்தநிலையில் அவருக்கு ரத்தத்தில் சர்க்கரைஅளவு குறைந்து உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து ஹன்னிவாலை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். கவலைக்கிடமாக உள்ள அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.