மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் TNB ஒப்பந்ததாரர் மரணம்

ஜாலான் கோத்தா திங்கி-குளுவாங் சாலையின் KM83இல் மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட சாலை விபத்தில், 23 வயதான Tenaga Nasional Bhd (TNB) ஒப்பந்ததாரர் ஒருவர் உயிரிழந்தார்.

நேற்று சனிக்கிழமை (ஜூலை 15) பிற்பகல் 3 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகவும், அதில் ஒரு ஜீப், ஒரு கார் மற்றும் ஒரு பேக்ஹோவும் சிக்கியதாகவும் குளுவாங் மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் பஹ்ரின் முஹமட் நோ தெரிவித்தார்.

“22 மற்றும் 23 வயதுடைய இரண்டு TNB தொழிலாளர்கள் சாலையோரத்தில் பராமரிப்புப் பணிகளைச் செய்து கொண்டிருந்தனர், அப்போது மேலும் இரண்டு ஓட்டுநர்கள் தங்கள் காரையும் பேக்ஹோவையும் அந்த இடத்தில் நிறுத்தி வைத்திருந்தனர்.

“26 வயதுடைய நபர் ஓட்டிச் சென்ற ஜீப் ஒன்று கோத்தா திங்கியில் இருந்து குளுவாங் நோக்கி வந்ததாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

“சம்பவ இடத்திற்கு வந்ததும், ஜீப் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, நிறுத்தப்பட்ட கார் மற்றும் பேக்ஹோ மீது மோதியது, அத்தோடு எதிர் பாதையில் இருந்த இரண்டு தொழிலாளர்கள் மீது மோதியது,” என்று அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 16) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இதனால் தொழிலாளிகளில் ஒருவரான முஹமட் ஹிஸ்ரான் ஐமன், 23, தலையில் பலத்த காயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

மற்ற தொழிலாளியான அமிருல் ஹைகல், 22, இடது கையில் லேசான காயம் ஏற்பட்டு, குளுவாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதே நேரத்தில் ஜீப் ஓட்டுநர் விசாரணைக்கு உதவுவதற்காக கைது செய்யப்பட்டார்,” என்று அவர் கூறினார்.

1987ஆம் ஆண்டு சாலை மற்றும் போக்குவரத்துச் சட்டம் பிரிவு 41(1)ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here