கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முஹமட் சனுசி முஹமட் நோருக்கு ஆதரவளிகும் வகையில் பல பெரிக்காத்தான் நேஷனல் ( PN) நாடாளுமன்ற உறுப்பினர்கள் செலாயாங்கிலுள்ள அமர்வு நீதிமன்றத்தில் கூடியிருந்தனர்.
இதில் பெண்டாங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ அவாங் சோலாஹுடின் ஹாஷிம்; ஜெர்லுன் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் அப்துல் கானி அகமட் மற்றும் பெசூட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சே முகமட் சுல்கிப்ளி ஜூசோ ஆகியோர் அங்கு வந்திருந்தனர்.
அவாங் சோலாஹுடினை சந்தித்த போது, PN ஐ சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்வது இது முதல் முறை அல்ல, இது ஒரு சட்டப்பூர்வ செயல்முறை, நீண்ட காலத்திற்கு முன்பு இருந்து இது உள்ளது”.
“இதன நோக்கம் நாம் வாயைக் கட்டுப்படுத்துவது அல்லது வேறு எதையாவது கட்டுப்படுத்துவது அல்ல. இது சாதாரணமானதுதான்,” என்று அவர் நீதிமன்ற வளாகத்தில் சந்தித்தபோது கூறினார்.