ஜூலை 26 வரை பலத்த காற்று, கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் – மலேசிய வானிலை ஆய்வு மையம்

வரும் புதன்கிழமை வரை நாட்டின் கடற்பகுதியை சுற்றி பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று காலை 10.40 மணிக்கு வெளியிட்ட ஒரு அறிக்கையில், , ஃபூகெட் (Phuket) கடற்பகுதியில் மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் அலைகளுடன் கூடிய பலத்த காற்று வீசும் என்று எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மெட்மலேசியாவின் கூற்றுப்படி, பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் மீன்பிடி மற்றும் படகு சேவைகள் உட்பட அனைத்து கப்பல் மற்றும் கடலோர நடவடிக்கைகளுக்கும் ஆபத்தானது என்று அது தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here