மனநல பாதிக்கப்பட்டவர் என்று நம்பப்படும் ஆடவர் 20 மீட்டர் உயரமுள்ள மரத்தில் இருந்து மீட்பு

செபெராங் ஜெயா,  ஜாலான் தோடாக் ஐல் என்ற இடத்தில் மனநலம் சரியில்லாதவர் என நம்பப்படும் ஒருவர், சுமார் 20 மீட்டர் உயரமுள்ள மரத்தில் இருந்து நேற்று மீட்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து பட்டர்வொர்த் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திற்கு காலை 8.08 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது 20 மீட்டர் உயரமுள்ள மரத்தின் உச்சியில் ஆடவர் அமர்ந்திருப்பதைக் கண்டதாக நடவடிக்கைத் தளபதி கைருல் நிஜாம் அபு ஹாசன் கூறினார். எங்கள் மீட்பு குழுவினர் படிக்கட்டுகளைப் பயன்படுத்தி அவரைப் பாதுகாப்பாக கீழே இறக்கினோம்.

பாதிக்கப்பட்டவர் பின்னர் மேல் நடவடிக்கைக்காக காவல்துறை மற்றும் துணை மருத்துவர்களிடம் ஒப்படைக்கப்பட்டார் என்று அவர் கூறினார். சுமார் 9.36 மணியளவில் பணி முடிந்தது. இதையடுத்து இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here