பினாங்கில் ஏற்படும் திடீர் வெள்ளத்தை சமாளிக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பீர் – பினாங்கு நுகர்வோர் சங்கம்

பினாங்கு மாநிலத்தில் அடிக்கடி ஏற்படும் திடீர் வெள்ளப்பெருக்கு பிரச்சனையை சமாளிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பினாங்கு மாநில அரசு மற்றும் தொடர்புடைய நிறுவனங்களை பினாங்கு நுகர்வோர் சங்கம் (CAP) வலியுறுத்துகிறது.

கடந்த சில வருடங்களாக இந்த திடீர் வெள்ளப்பெருக்கு சம்பவம் மீண்டும் மீண்டும் நிகழ்ந்து வருகிறது, ஆனால் இப்பிரச்சனை ஒரு முடிவின்றி இன்னும் நீடித்து வருகிறது, மேலும் இது மிகவும் தீவிரமானதாகக் கருதப்படும் பிரச்சனை என்று, பினாங்கு நுகர்வோர் சங்கத்தின் தலைவர் மொஹிதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.

“சமீபத்தில், மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் வீட்டுத் தோட்டங்கள் மற்றும் கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 10 பகுதிகள் பாதிக்கப்பட்டதுடன், சாலையைப் பயன்படுத்துபவர்கள் உட்பட குடியிருப்பாளர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் பாதித்துள்ளது என்றார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பல முன்னேற்றத் திட்டத்தைச் செயல்படுத்தியதன் விளைவும், மழையின் போது நீர்ப்பிடிப்பாக மாறும் இயற்கை காடுகளை அழித்ததும்தான் இந்தச் சம்பவத்துக்குக் முக்கிய காரணம் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது என்று மொஹிதீன் அப்துல் காதர் கூறினார்.

மொஹிதீனின் கூற்றுப்படி, இது தவிர, குறுகிய மற்றும் மோசமாக நிர்வகிக்கப்பட்ட வடிகால் அமைப்பும் திடீர் வெள்ளம் ஏற்படுவதற்கு ஒரு காரணம். அதாவது ஆய்வு செய்யப்பட்ட மலைகளில் இருந்து மழை பெய்யும் போது நீர் ஓட்டத்திற்கு இடமளிக்க முடியாது மற்றும் சேறு படிவுகள் மற்றும் குப்பைகளால் தடுக்கப்படுகிறது.

“வடிகால் அமைப்பு மற்றும் ஆற்று நீர் வெளியேற்றம் போன்றவற்றை திறம்பட செயல்படுத்தா தவறியதால், இந்த பிரச்சனை திடீர் வெள்ளப்பிரச்சனை சமாகி வருகிறது.

“மண் அரிப்பு காரணமாக ஆறுகள் மற்றும் ஆற்றின் முகத்துவாரங்கள் ஆழமற்றதாக மாறும் போது பள்ளங்கள் மற்றும் வடிகால்கள் புதர்கள் மற்றும் பல்வேறு கழிவுப்பொருட்களால் நிரப்பப்படுகின்றன,” என்று அவர் கூறினார்.

இந்த காரணங்களை சரிசெய்யாது விட்டுவிட்டால், அவை உள்ளூர்வாசிகளின் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கலாம் என்று தான் நம்புவதாக மொஹிதீன் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here