பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த மொத்தம் 568 ஆவணமற்ற கள்ளக்குடியேறிகள் கிழக்கு கடற்கரை மாவட்டமான சண்டாக்கானிலிருந்து குடிநுழைவுத் துறையால் அவர்களது சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
சண்டாக்கான் மற்றும் தாவாவ் குடிநுழைவு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைவரும் நேற்று (ஜூலை 20) அன்று ஜாம்போங்கா நகர துறைமுகத்திற்குச் செல்லும் எம்வி அன்டோனியா 1 என்ற படகில் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.
இந்த குழுவில் 392 ஆண்கள், 143 பெண்கள் மற்றும் 33 குழந்தைகள் உள்ளடங்குவதாக சபா குடிநுழைவு இயக்குனர் டத்தோ ஷரீபா சிட்டி சலேஹா ஹபீப் யூசாஃப் தெரிவித்தார்.








