கூச்சிங்கில் விரைவு போக்குவரத்துக்காக ஸ்மார்ட் டிராம்

சீனாவில் உருவாக்கப்பட்ட உலகின் முதல் ஹைட்ரஜனில் இயங்கும் ஸ்மார்ட் டிராம், ஹுனான் மாகாணத்தில் உள்ள அதன் உற்பத்தித் தளத்திலிருந்து மலேசியாவுக்கு கொண்டுவரப்பட்டு, கூச்சிங்கின் நகர்ப்புற போக்குவரத்தில் பயன்டுத்தப்படவுள்ளது. முன்மாஇது விரைவுப் போக்குவரத்தை உறுதிச்செய்ய முன்மாதிரியாக இருக்கும்.

இது குச்சிங்கின் தன்னாட்சி விரைவான போக்குவரத்து (ART) அமைப்பின் ஒரு பகுதியாக பயன்படுத்த ஷாங்காயிலிருந்து அனுப்பப்படும் என்று சீனா குளோபல் டெலிவிஷன் நெட்வொர்க் (CGTN) தெரிவித்துள்ளது.

அறிக்கையின்படி, ஸ்மார்ட் டிராம் நீண்ட போக்குவரத்து மற்றும் குறைவான எரிபொருள் நிரப்பும் நேரம் ஆகிய நன்மைகளைக் கொண்டுள்ளது, மேலும் இது சுற்றுச் சூழலுக்கு பாதுகாப்பானது. அத்தோடு இந்த புத்திசாலித்தனமான வடிவமைப்பு மூலம் மலேசியாவின் பொது போக்குவரத்து துறையில் அதன் தேவைகளுக்கு ஏற்ப விரைவாக செயற்படும் அம்சத்தையும் கொண்டுள்ளது” என்று CGTN கூறியது.

இந்த சோதனைக்காலம் கூச்சிங்கில் மூன்று மாதங்கள் முன்னெடுக்கப்படும்.

இது வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால், ஸ்மார்ட் டிராம் நகரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் என்றும் , பயணிகளுக்கு நம்பகமான மற்றும் திறமையான சேவையை வழங்கும் என்றும் அது நம்பிக்கை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here