மாநில தேர்தல்: கோத்தா லாமா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என DAP நம்பிக்கை

அடுத்த மாதம் நடைபெறவுள்ள கிளாந்தான் மாநிலத் தேர்தலில் கோத்தா லாமா மாநிலத் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பானை (PH) பிரதிநிதித்துவப்படுத்த தமது கட்சியின் வேட்பாளருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று DAP இன்னும் அதிக நம்பிக்கையுடன் உள்ளது என்று, கிளாந்தான் DAP தலைவர் டத்தோ அசாஹா அப்துல் ராணி தெரிவித்துள்ளார்.

கோத்தா லாமாவுக்கு மலாய்க்காரர் அல்லாத 38 விழுக்காடு வாக்காளர்கள் உள்ளனர், எனவே மாநில அளவில் DAP கட்சிக்கு வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகக் கருதுகிறது.

“இருப்பினும் கட்சித் தலைமையின் முடிவுக்கு நாங்கள் செவிசாய்ப்போம், ஆனால் கோத்தா லாமாவில் உள்ள சீன வாக்காளர்கள் DAP அங்கு போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்று அவர் கூறினார்.

“சீன சமூகத்திலிருந்து அத்தொகுதியில் ஒரு சுயேட்சை வேட்பாளர் போட்டியிட்டால் , ஆதரவு மற்றும் வாக்குகள் மாறும் என்று நாங்கள் கவலைப்படுகிறோம்,” என்று அவர் நேற்றிரவு கிளாந்தான் DAP கட்சியின் நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த அசாஹா, அந்த இடத்தில் போட்டியிடுவதற்கு பொருத்தமான மலாய் மற்றும் சீன சமூகங்களைச் சேர்ந்த பொருத்தமான வேட்பாளர்கள் கட்சிக்குள் இருப்பதாகவும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here