உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சலாவுதீன் அயூப் மூளையில் ரத்தக்கசிவு காரணமாக அறுவை சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது தனது 61வது வயதில் இன்று காலமானார்.
சலாவுதீனின் மறைவை அவரது மகள் ஃபாத்திஹா சலாவுதீன் தனது முகநூல் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார். எங்கள் குடும்பத் தலைவரான சலாஹுதீன் அயூப் இரவு 9:23 மணிக்கு காலமானார் என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் எங்களுக்கு வருத்தமாக இருக்கிறது.
அமானா துணைத் தலைவர் கெடாவின் அலோர் ஸ்டாரில் உள்ள சுல்தான் பஹியா மருத்துவமனையில் காலமானார். வெள்ளிக்கிழமை இரவு குமட்டல் மற்றும் வாந்தி எடுத்ததாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பரிசோதனையில் அவர் மூளைச்சாவு அடைந்திருப்பது தெரியவந்தது. அவர் மனைவியையும் ஆறு குழந்தைகளையும் விட்டுச் செல்கிறார். சலாவுதீனின் உடல் தஞ்சோங் பியாயில் உள்ள அவரது தாயார் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்படும் என்றும், இறுதிச் சடங்குகள் தொடர்பான கூடுதல் தகவல்களை அமைச்சரின் அலுவலகம் விரைவில் வழங்கும் என்றும் சலாவுதீனின் செய்தித் தொடர்பாளர் சியாகிரின் ஹுஸ்னல் அறிக்கையை பெர்னாமா மேற்கோள் காட்டியது.
இறந்தவரின் குடும்பத்தினர் அனைவரின் பிரார்த்தனைகளுக்கும் இரங்கலுக்கும் தங்களது மிகுந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்வதாக அவர் மேலும் கூறினார். கெடாவின் அலோர் ஸ்டாரில் உள்ள சுல்தானா பஹியா மருத்துவமனையின் அனைத்து மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் அவர்கள் நன்றி தெரிவிக்க விரும்புகிறார்கள் என்று அவர் கூறினார்.









