டத்தோஸ்ரீ சலாவுதீன் அயூப்பின் மரணம் என்னை மிகவும் பாதித்திருக்கிறது; பிரதமர்

டத்தோஸ்ரீ சலாவுதீன் அயூப் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 23) இரவு காலமானது தன்னை மிகவும் பாதித்ததாக  பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

அன்வார் தனது முகநூல் பதிவில், உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவுத் துறை அமைச்சரின் மறைவு தனக்கும் தனது குடும்பத்திற்கும் ஒரு பெரிய இழப்பாக உணர்ந்ததாகவும், தேசத்திற்கான நீண்ட போராட்டத்தில் அவர் உறுதியாக நின்றதாகவும் கூறினார்.

அவரது பங்களிப்பு மற்றும் கருணையை பொருள் ரீதியாக திருப்பிச் செலுத்த முடியாது  என்று அவர் கூறினார். சலாவுதீன் கடின உழைப்பாளி, நம்பகமானவர் மற்றும் பொறுப்புள்ள ஒரு வலுவான நபராகவும் இருந்தார். ஓய்வெடுங்கள் நண்பரே என அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.

அவரது குடும்பத்திற்கு அல்லாஹ் பொறுமையையும் விடாமுயற்சியையும் வழங்க வேண்டும் என்றும், அவரது ஆன்மா கருணை பொழிந்து பக்திமான்கள் மத்தியில் இடம் பெற வேண்டும் என்றும்  தான்  பிரார்த்தனை செய்தவாக பிரதமர் தெரிவித்தார்.

சலாவுதீன், 61, வெள்ளிக்கிழமை (ஜூலை 21) பிற்பகுதியில் மூளை ரத்தக்கசிவுக்கான அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து கெடாவின் அலோர் ஸ்டார் உள்ள சுல்தானா பஹியா மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 9.23 மணிக்கு இறந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here