மரக்கன்றுகளை நடுவோம் ! கடற்கரையை பாதுகாப்போம் !- பசுமை திட்டம்

மலாக்கா,

உலகின் கால நிலை மாற்றத்தில் மனிதர்கள் தங்களது பங்களிப்பை வழங்கும் வகையாக மரக்கன்றுகளை நடுவோம் !, கடற்கரையை பாதுகாப்போம் ! எனும் திட்டம் மலாக்கா ஷாஸ் தங்கும் விடுதியின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

அதன் தலைமை இயக்குனர் டேனிஸ் ஸ்டேம்பர்ட் முயற்சியிலும் இவருக்கு உறுதுணையாக மலாக்கா பிடிஜி ,தியோ பிரோஸ் , எல்சிகே குழுமம் ஆகிய மூன்று தனியார் கட்டுமான நிறுவனங்கள், மாமி நொறுங்கு தினி நிறுவனம் மற்றும் மலாக்கா நகராண்மை கழகத்தின் இணை ஆதரவில் நிகழ்க்சி நடைபெற்றது.

பந்தாய் புத்ரி கடற்கரையோரத்தில் நடைபெற்ற இத்திட்டத்திற்கு முத் தாய்ப்பு வழங்கும் விதமாக தலை நகரிலிருந்து ப்ர்த்தியேக வருகை தந்தனர் ஹேவன் மோட்டர் சைக்கள் கிலாப் ( Heaven Motorcycle Club) .

இருபதுக்கும் மேற்பட்ட ஹர்லி டெவின்சன் ரக மோட்டார் சைக்கள் பேரணி குழுவிற்கு தலைமைப் பொருப்பேற்று பயணித்தார் மலாக்கா போலீஸ் தலைமையக வணிக குற்றவியல் தடுப்பு பிரிவின் தலைவர் சுப்ரிண்டெண்டன் ஏ. சுந்தராஜன் . வீட்டுக்கு ஒரு மரம் நடுவோம் ! என்பதை தாண்டி நாடு முழுவதிலும் மரக்கன்றுகளை நட்டு பசுமையை நேசிப்போம். வருங்கால சந்ததியினருக்கு நல் வழி காப்போம் என்றார். மேலும் நிகழ்சியில் கலந்துக் கொண்ட பொது மக்களுக்க்கு “ஸ்கேமர் “குறித்த விழிப்புணர்வு உரையை பகிர்ந்துக் கொண்டார்.

கடற்கரை தூய்மையாகவும், அழகாகவும் இயற்கையை காக்கும் வகையில் நடை பெற்ற பசுமையை நேசிப்போம் திட்டட்திற்கு பெறும் ஆதரவும் ஒத்துழைப் பும் வழங்கியர்களுக்கு ஏற்பாட்டுக் குழு தலைவரும் பிடிஜி நிருவனத்தின் தலைமை இயக்குநரான சு, மகேந்திரன் நன்றியை கூறினார்,

பசுமை திட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் நாட்டின் பிரபல மலாய் பாடகர் எலிகேட்ஸ் குழுமம் டத்தோ டேவிட் ஆறுமுகம் கலந்துக் கொண்டு மரக்கன்றுகளை நட்டார்.

பந்தாய் குண்டோர் சட்ட மன்ற உறுப்பி னர் துமினா காடி நிகழ்சியில் கலந்துக் கொண்டார். அழகிய கடற்கரைகளை பராமரிக்கும் இத்தகைய பசுமை திட்டம் வரவேற்க கூடிய பயன்மிக்க நட வடிக்கை எனவும் பந்தாய் புத்ரி கடற்கரையை பாதுகாத்து தூய்மையை பேணுவது நமது அனைவரின் கடமை என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here