ஜாலான் பாலிக் பூலாவ்-ஜாலான் தெலுக் பஹாங் சாலை டிசம்பரில் மீண்டும் திறக்கப்படும் என எதிர்பார்ப்பு

பாராட் டயா மாவட்டத்தில் உள்ள கூட்டரசு சாலையான FT006, ஜாலான் பாலிக் பூலாவ் முதல் தெலுக் பஹாங் வரையான சாலை, இந்த மாத தொடக்கத்தில் ஏற்பட்ட மண் அரிப்பு மற்றும் நிலச்சாய்வைத் தொடர்ந்து, அதன் புணரமைப்பு ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு டிசம்பரில் மீண்டும் அச்சாலை திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FT006 வழித்தடத்தில் 45.40 மற்றும் 46.80 பிரிவுகளில் ஏற்பட்ட சாலைச் சரிவு பழுதுபார்ப்பதற்காக, RM1.799 மில்லியன் மொத்த பராமரிப்பு செலவை உள்ளடக்கிய சீரமைப்பு பணி இன்று தொடங்கியது என்று, பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here