முட்டை முதல் மீன் வரை… மைக்ரோவேவ் ஓவனில் மீண்டும் சூடாக்க கூடாத 7 உணவுகள்

நவீன சமைக்கும் இயந்திரங்களில் மைக்ரோவேவ் ஓவனும் ஒன்று. பேக்கிங் செய்வதற்கு மட்டுமல்லாமல், பல விதமான உணவுகளை இதில் சமைக்க முடியும். பெரும்பாலான வீட்டில், பேக்கிங் சார்ந்த உணவுகள் செய்ய மட்டுமில்லாமல், உணவு சூடு படுத்தவும் மைக்ரோவேவ் ஓவன் பயன்படுத்தப்படுகிறது. சட்டென்று குழம்பு, ரசம், கிரேவி என்று சூடு செய்வதுண்டு. ஆனால், எல்லா உணவுகளையும் மைக்ரோவேவ் ஓவனில் சூடு செய்யக் கூடாது.

ஓவனில் எந்த உணவுகளை எல்லாம் மீண்டும் சூடுபடுத்தக் கூடாது? நம் வீடுகளில் மீதமான உணவுகளை வீணாக்காமல், அதை மறுபடியும் சூடுபடுத்தி சாப்பிடுவோம். எல்லாருடைய வீடுகளிலும் இந்தப் பழக்கத்தை கடைபிடிப்பார்கள். இந்த உணவுகளை சூடுபடுத்துவதற்கு பெரும்பாலானோர் ஓவனையே பயன்படுத்துவார்கள். ஆனால் இதில் எல்லா வகை உணவுகளையும் சூடுபடுத்துவது நல்லதல்ல. சில குறிப்பிட்ட உணவுகளை ஓவனில் வைத்து மீண்டும் சூடாக்கும் போது, அந்த உணவின் சுவை, நறுமணம், சத்துகள் போன்றவற்றில் மாறுதல்கள் ஏற்படும்.

 சில சமயங்களில் இதனால் நம் உடல்நலத்திற்கு கூட கேடு உண்டாகும். உங்கள் உணவு தரத்தோடும் உட்கொள்வதற்கு பாதுகாப்பாகவும் இருக்க வேண்டுமென்றால், எந்த உணவுகளையெல்லாம் மீண்டும் ஓவனில் சூடாக்க கூடாது என்பதை நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். எந்த உணவுகளை ஓவனில் மீண்டும் சூடுபடுத்த கூடாது என்பதை தெரிந்துகொள்ள, இந்த கட்டுரையை படியுங்கள்.

ஃபிரெஞ்ச் ஃப்ரைஸ் மற்றும் வறுத்த உணவுகள் : ஃபிரெஞ்ச் ஃப்ரைஸ் மற்றும் பிற வறுத்த உணவுகளை நாம் மீண்டும் ஓவனில் சூடாக்கினால், அந்த உண்வில் உள்ள மொறுமொறுப்புத் தன்மையை இழந்து, பஞ்சுப் போல் ஊதிப் போய்விடும். ஃபிரெஞ்ச் ஃப்ரைஸ் போன்ற உணவுகள் மொறுமொறுப்போடு இருந்தால் தான் நன்றாக இருக்கும். ஆகவே இதுபோன்ற உணவுகளை மீண்டும் ஓவனில் சூடாக்காதீர்கள்.

 இறைச்சி : நம்மில் பெரும்பாலானோர் இறைச்சி உணவுகளை சூடாக சாப்பிடவே விரும்புவோம். அதனால் ஆறிப்போன இறைச்சியை மீண்டு ஓவனில் வைத்து சூடுபடுத்தி சாப்பிடும் பழக்கத்தை நாம் கடைபிடித்து வருகிறோம். இறைச்சி உணவுகளை இப்படி செய்வதால் அதன் சுவை குறைந்துவிடும். இதற்குப் பதிலாக, இறைச்சிகளை க்ரில் செய்தோ அல்லது பேனில் வைத்து வறுத்தோ சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும். ஆகையால் ஒருபோதும் இறைச்சியை ஓவனில் மீண்டும் சூடாக்காதீர்கள்.

இறைச்சி : நம்மில் பெரும்பாலானோர் இறைச்சி உணவுகளை சூடாக சாப்பிடவே விரும்புவோம். அதனால் ஆறிப்போன இறைச்சியை மீண்டு ஓவனில் வைத்து சூடுபடுத்தி சாப்பிடும் பழக்கத்தை நாம் கடைபிடித்து வருகிறோம். இறைச்சி உணவுகளை இப்படி செய்வதால் அதன் சுவை குறைந்துவிடும். மேலும் புற்றுநோய் போன்றவற்றை உருவாக்கும்.  இதற்குப் பதிலாக, இறைச்சிகளை க்ரில் செய்தோ அல்லது பேனில் வைத்து வறுத்தோ சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும். ஆகையால் ஒருபோதும் இறைச்சியை ஓவனில் மீண்டும் சூடாக்காதீர்கள்.

முட்டை அல்லது முட்டை சார்ந்த உணவுகள் : முட்டை குழம்பையோ அல்லது முட்டை உணவுகளையோ ஓவனில் வைத்து மீண்டும் சூடாக்குவது நல்லதல்ல. அதற்குப் பதிலாக, அதை சமைத்தவுடன் சாப்பிடுவதே சாலச் சிறந்தது. அல்லது, சூடாக்காமல் அப்படியே சாப்பிடுவது நல்லதுதான். அதுமட்டுமின்றி, முட்டைகளை ஒருபோதும் ஓவனில் வைக்கக்கூடாது.

 மீன் மற்றும் கடல் உணவுகள் : அடுத்ததாக, மீன் மற்றும் கடல் உணவுகளையும் ஒருபோதும் ஓவனில் மீண்டும் சூடுபடுத்தாதீர்கள். மாறாக, இந்த உணவுகளை சூடுபடுத்தும் போது, அதிலுள்ள ஊட்டச்சத்துகளும் புரதங்களும் அழிக்கப்படுகின்றன. மேலும், ஓவனில் இதை சூடாக்கும் போது, இதன் சுவையும் அந்தளவிற்கு நன்றாக இருக்காது. ஆகவே கடல் உணவுகளின் சுவையும் ஊட்டச்சத்தும் உங்களுக்கு கிடைக்க வேண்டுமென்றால், ஒருபோதும் இதை ஓவனில் சூடுபடுத்தாதீர்கள்.

கீரைகள் : கீரைகள், லெட்டுயூஸ் மற்றும் பிற இலை சார்ந்த காய்கறிகளில் நைட்ரேட்ஸ் அடங்கியுள்ளது. இதை நாம் ஓவனில் மீண்டும் சூடுபடுத்தும் போது, இதிலுள்ள நைட்ரேட்ஸ் நம் உடலுக்கு தீங்கை விளைவிக்கும் நைட்ரைட்ஸாக மாற்றமடைகிறது. இவை புற்றுநோயை உண்டாக்க கூடியதாகும்.

தக்காளி சாஸ் : இதையும் மைக்ரோ ஓவனில் வைத்து மீண்டு சூடுபடுத்தாதீர்கள். ஏனென்றால் இவை உள்ளே சிதறிவிடக் கூடிய வாய்ப்புள்ளது. ஏற்கனவே தக்காளி சாஸை கொஞ்சம் கெட்டியாக இருக்கும். மீண்டும் இதை சூடுபடுத்தும் போது வெடித்து சிதறிவிடும். இதனால் ஓவன் உள்ளே கறை படிந்து, அதை சுத்தப்படுத்த நீங்கள்தான் கஷ்டப்பட வேண்டியிருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here