தேர்தல் முறைகேடு தொடர்பில் 15 புகார்கள் பதிவு – சிலாங்கூர் காவல்துறை

பெட்டாலிங் ஜெயா:

அடுத்த மாதம் 12ஆம் தேதி நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தல் தொடர்பில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த கொடிகள் மற்றும் பதாகைகளை சேதமாக்கியது தொடர்பாக மொத்தம் 15 போலீஸ் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில காவல்துறை தலைவர், ஆணையர் டத்தோ உசேன் உமர் கான் தெரிவித்தார்.

அவற்றிக் கோலா சிலாங்கூரில் ஐந்து, சுபாங் ஜெயாவில் இரண்டு மற்றும் வட கிள்ளானில் ஒன்று உட்பட பல்வேறு இடங்களை உட்படுத்திய போலீஸ் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் கூறினார்.

குற்றவியல் சட்டத்தின் 427 வது பிரிவின் கீழ் சேட்டைகள் செய்து குழப்பத்தை ஏற்படுத்தியதற்காகவும், குற்றவியல் சட்டத்தின் 435 வது பிரிவின் கீழ் தீயினால் தீங்கு விளைவித்ததற்காகவும் ஆறு விசாரணை அறிக்கைகளை நாங்கள் திறந்துள்ளோம் என்று, இன்று (ஜூலை 27) காவல்துறையினரின் தேர்தல் ஒத்திகையை நேரில் பார்த்த பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் “தேர்தல் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால், மாநிலத் தேர்தல்களின் போது தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம் என்று அனைத்துக் கட்சிகளையும் அவர்களின் ஆதரவாளர்களையும் கேட்டுக்கொள்கிறோம் என்றார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here