MSK இன் வெளியீட்டில் பரத்தின் “LOVE” திரைப்படம்; மலேசியத் திரையரங்குகளில் இன்று வெளியீடு காண்கிறது

பரத் நடிப்பில் வெளியாகியுள்ள “LOVE” திரைப்படத்தை, இன்று MSK Cinemas Sdn. Bhd நிறுவனம் மலேசியாவிலுள்ள திரையரங்குகளில் வெளியீடு காண்கிறது . இது அவருடைய ஐம்பதாவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

பாய்ஸ் திரைப்படத்தில் அறிமுகமாகி காதல் திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகர் பரத். அதைத்தொடர்ந்து வெயில், எம் மகன் என பல ஹிட் படங்களை கொடுத்தவர், இடையில் சில ஆண்டுகள் திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்தார் என்றே சொல்லவேண்டும்.

இதை தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களாக மீண்டும் படங்களில் நடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்.

இதைத்தொடர்ந்து தற்போது மலையாளத்தில் வெளியாகி வெற்றி அடைந்த Love என்ற திரைப்படத்தை தமிழில் அதே பெயரில் ரீமேக் செய்து நடித்துள்ளார் பரத். இந்த திரைப்படத்திலும் பரத்திற்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார்.

மலையாளத்தில் புலி முருகன், லூசிபர், குரூப், சல்யூட் ஆகிய படங்களுக்கு டயலாக் ரைட்டராக பணியாற்றிய ஆர்.பி பாலா இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் விவேக் பிரசன்னா, டேனியல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here