சுஷ்மிதா சென் திருநங்கையாக நடிக்கும் தாலி வெப்தொடரின் டீசர் வெளியானது

1994ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற சுஷ்மிதா சென், தமிழில் ரட்சகன் படத்தில் நடித்து பலரின் கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு தொடர்ந்து இந்தி படங்களில் நடித்து பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். 47 வயதாகும் இவர் தற்போது வரை திருமணம் செய்துகொள்ளவில்லை. இருப்பினும் சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல மாடலான ரோஹ்மான் ஷாவ்லுடன் காதல் உறவில் இருந்து வந்தார்.

ஆனால் கடந்த ஆண்டு இருவரும் பிரிந்ததையடுத்து, தான் தத்தெடுத்த இரண்டு குழந்தைகளை வளர்க்கும் பணிகளில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். இதனிடையே திரைப்படம் நடிப்பதில் இருந்து விலகியுள்ள அவர், சில வெப் தொடர்களில் மட்டும் நடித்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here