பூச்சோங் ஹோட்டலில் ஒரு பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒரு வங்கதேச கட்டுமானத் தொழிலாளியை போலீஸ் கைது செய்தது.
பூச்சோங், தாமான் மாவாரில் உள்ள ஒரு ஹோட்டலில் 39 வயது இந்தோனேசியப் பெண் கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி இரவு 10.15 மணியளவில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருக்கும் 23 வயது வங்கதேச இளைஞர், பொறாமை காரணமாக இக்கொலையை செய்ததை முதல் கட்ட விசாரணையில் ஒப்புக் கொண்டதாக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி A. அன்பழகன் கூறினார்.
புலன்விசாரணையில் உதவுவதற்காக அந்நபர் ஜனவரி 10 ஆம் தேதி வரை போலீஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டார்.





















