மாஸ்கோ மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் – விமான நிலையம் மூடல்

உக்ரைன் – ரஷியா இடையேயான போர் இன்று 522 வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன.

போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் ரஷியா மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. ரஷிய தலைநகர் மாஸ்கோ மீது இன்று அதிகாலை 3 உக்ரைன் டிரோன்கள் தாக்குதல் நடத்தின. இதில் ஒரு டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது. எஞ்சிய 2 டிரோன்களும் மின்னணு ஆயுதங்கள் மூலம் தடுக்கப்பட்டன.

தடுக்கப்பட்ட டிரோன்கள் மாஸ்கோவில் உள்ள சர்வதேச வர்த்தக மைய கட்டிடம் மீது மோதின. இதில், யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், தாக்குதல் முறியடிக்கப்பட்டதாகவும் ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக விமான நிலையம் மூடப்பட்டது. உக்ரைன் எல்லையில் இருந்து ரஷிய தலைநகர் மாஸ்கோ 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here