மடானி அரசாங்கத்தில் துணை அமைச்சராக உள்ள ஒருவர் Lembaga Hasil Dalam Negeri (LHDN) எனப்படும் உள்நாட்டு வருமான வாரியத்தில் வரி பாக்கி வைத்திருப்பது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு தெரியுமா?
இந்த விவகாரம் கோல குபு பாரு சட்டமன்ற தொகுதி இடை தேர்தல் பிரசாரத்தில் பூதாகரமாக தலையெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர் தரப்பினர் இந்த விவகாரத்தை அவர்களின் பிரச்சாரத்தில் பயன்படுத்த இருப்பதாகவும் நம்பப்படுகிறது.
அவர்கள் இதற்குரிய ஆவணங்களை வைத்திருப்பதாகவும் தெரிகிறது.
பிரச்சாரத்தின் போது இதனை அவர்கள் ஆதாரமாக விநியோகிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த விவகாரம் கே கே பி இடைதேர்தலில் ஆளும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு பாதகத்தை ஏற்படுத்தலாம் எனவும் நம்பப்படுகிறது.

சம்பந்தப்பட்ட துணை அமைச்சர் அண்மையில் வெளி நாட்டிற்கு செல்வதற்கு உள்நாட்டு வருமான வாரியத்தின் சிறப்பு அனுமதி பெற்றிருக்கிறார். அது தொடர்பான கடிதத்தின் நகலும் அவர்கள் வசம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
வருமான வரி செலுத்தாத ஒருவரை தன்னுடைய அமைச்சரவையில் துணை அமைச்சராக அன்வார் நியமனம் செய்தது ஏன்?
அதேசமயம் வரி செலுத்தாமல் இருப்பவர்கள் மீது வழக்குத் தொடுக்கும் அதிகாரத்தைக் கொண்டிருக்கும் உள்நாட்டு வருமான வாரியம் இந்த துணை அமைச்சர் விவகாரத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பிரதமராவது சம்பந்தப்பட்ட துணை அமைச்சர் மீது நடவடிக்கை எடுப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.




















