சீறிய அலைகளால் மூழ்கிய கப்பல்: 11 பேர் மாயம்

ஜகார்த்தா: மலாக்கா ஜலசந்தியில் இன்று சீறிய அலை காரணமாக 11 பணியாளர்களுடன் கப்பல் ஒன்று நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. KMலிண்டாங் தைமூர் சமுதேரா என்ற கப்பல் தஞ்சோங் பலாய் அசாஹானிலிருந்து மலேசியா நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்ததாக பெக்கான்பாரு மீட்பு அமைப்பின் தலைவர் Budi Cahyad தெரிவித்தார்.

One Fathom Bank பெரிய அலைகளால் தாக்கப்பட்டதால் கப்பல் தண்ணீரில் மூழ்க தொடங்கியது என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார். One Fathom Bank என்பது கிள்ளான் டெல்டாவில் இருந்து தென்மேற்கே 30 கிமீ தொலைவில் உள்ளது.

மேடானில் உள்ள மற்ற மீட்பு நிறுவனங்களுடனும், துமாயில் உள்ள கப்பல் போக்குவரத்து சேவை மற்றும் புத்ராஜெயாவில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துடனும் பெக்கான்பாரு ஒருங்கிணைத்ததாக புடி கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here