விபத்தில் சிக்கினார் ஜெராம் பாடாங் தொகுதி வேட்பாளர் ; ஆபத்தான நிலையில் ஓட்டுநர்

கோலப்பிலா, ஜூலை 31:

பாரிசான் நேசனலின் ஜெராம் பாடாங் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் டத்தோ முகமட் ஜைதி அப்துல் காதிர் வாகன விபத்தில் சிக்கியுள்ளார்.

ஜாலான் பாசீர் பெசார்-பலோங் பகுதியில், அதிகாலை 3.25 மணியளவில் குறித்த விபத்து நடந்ததாக, அம்னோ பொதுச்செயலாளர் டத்தோ டாக்டர் அசிரஃப் வாஜ்டி டுசுகி தெரிவித்தார்.

“அவரது கார் ஓட்டுநர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளார் என்றும், இருவரும் குணமடைய பிரார்த்திக்கிறோம்” என்று அவர், இன்று வெளியிட்டுள்ள தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

ஜைடி தற்போது வலது முழங்காலில் சிறிது வீக்கத்துடன், நிலையான நிலையில் உள்ளார். ஆனால் அவரது கார் ஓட்டுநர் தற்போது ஜெம்போல் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருவதாக அறியமுடிகிறது.

ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தலில், ஜெராம் பாடாங் மாநிலத் தொகுதிக்கான நேரடிப் போட்டியில் பெரிக்காத்தான் நேஷனலின் சுரேஷ் ஸ்ரீனிவாசனை ஜெய்டி எதிர்கொள்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here