அதிவேகமாக வாகனத்தை செலுத்திய போதைப்பொருள் பித்தரை விரட்டி பிடித்த போலீசார்

ஜோகூர் பாருவில் 31 வயது நபர் அதிவேகமாக சென்ற வாகனத்தை போலீசார் துரத்தி சென்றபோது கார் உலோக வேலியில் மோதி நின்றது. புதன்கிழமை (ஆகஸ்ட் 2) அதிகாலை 2 மணியளவில் ஜாலான் தெப்ராவ் வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு கார் ஓட்டிச் செல்வதை காவல்துறையின் நடமாடும் ரோந்து வாகனம் (MPV) கண்டதாக ஜோகூர் பாரு தெற்கு காவல்துறை உதவி ஆணையர் ரவூப் செலமாட் தெரிவித்தார்.

அப்போது கார் திடீரென அபாயகரமாகச் சென்றது. மொத்தம் 7 போலீஸ் எம்பிவிகள் சந்தேக நபரை 15 கிமீ தூரம் சுமார் 11 நிமிடங்கள் துரத்திச் சென்றன. பின்னர்  குடியிருப்பு நுழைவாயில் பகுதியில் கார் உலோக வேலியில் மோதியதால் துரத்தல் முடிவுக்கு வந்தது என்று அவர் புதன்கிழமை இங்கு கூறினார். சந்தேக நபருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாகவும், ஆனால் சம்பவ இடத்திலேயே காவல்துறையினரால் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் ஏசிபி ரவூப் மேலும் தெரிவித்தார்.

சந்தேக நபருக்கு நான்கு போதைப்பொருள் உட்பட ஒன்பது குற்றங்கள் இருப்பதாக சோதனைகள் காட்டுகின்றன. மேலும் அவர் மெத்தாம்பேட்டமைன் உட்கொண்டிருந்தது சோதனையில் தெரிய வந்ததாகவும் அவர் கூறினார். மேலும் சந்தேக நபரின் காரையும் போலீசார் கைப்பற்றினர். சந்தேக நபர் தற்போது சனிக்கிழமை (ஆகஸ்ட் 5) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here