ஆண் பணியாளர்கள் பெண்களுக்கு உணவளிக்கும் வீடியோ வைரல்: சீன உணவகம் மூடப்பட்டது

சீனாவில் யுனான் மாகாணத்தில் உள்ள ஒரு உணவகத்தில் , ஆண் பணியாளர்கள் பெண்களுக்கு வாய்க்கு வாய் ஊட்டுவது போன்ற காணொளிகள் சீன சமூக ஊடக தளங்களில் வைரலானதையடுத்து அந்த உணவகம் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டது.

வைரலான வீடியோக்களில், உயரமான மற்றும் அழகான ஆண் பணியாளர்கள் பெண் வாடிக்கையாளர்களுக்காக கவர்ச்சியான நடனம் ஆடுவதோடு, சில அருவருப்பான காட்சிகளையும் கொண்டிருந்ததோடு அவர்களில் சிலர் பெண் வாடிக்கையாளர்களுக்கு தமது வாயால் ஊட்டி, பின்னர் வாயைத் துடைத்து, தோள்பட்டையில் மசாஜ் செய்வதுபோலவுமான காட்சிகளும் இடம்பெற்றிருந்தன.

இந்த வீடியோக்கள் மக்களிடையேயே பெரும் அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன் , ஆண் பணியாளர்களின் இந்த நடவடிக்கை சமூக நெறிமுறைகளை மீறுவதாகக் சமூகவலைத்தளங்களில் எதிர்ப்புத் தெரிவித்தனர். எனவே . ஜூலை 26 அன்று உணவகம் மூடப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

எனவே சுமார் 10,664 யுவான் பணத்தையும் சட்டவிரோத வருமானம் என கருதி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் உணவகத்திற்கு சட்டவிரோத வருமானத்தில் 10 மடங்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here