கோலாலம்பூர், அகஸ்ட்டு 4:
சிலாங்கூரின் தாமான் புக்கிட் செர்டாங் ஒரு பழைய உலோக சேமிப்புக் கடை வளாகத்திற்கு அருகே, இன்று பிளாஸ்டிக் பையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
இந்த சம்பவ தொடர்பில், சுமார் 1.30 மணியளவில் ஸ்ரீ கெம்பாங்கான் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது என்று செர்டாங் மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் AA. அன்பழகன் கூறினார்.

தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அங்குள்ள ஒரு பழைய உலோக சேமிப்புக் கடை வளாகத்திற்கு அருகே, அடையாளம் தெரியாத ஆடவர் ஒருவரின் சடலம் ஒரு வெள்ளை பிளாஸ்டிக் பையில் கண்டுபிடிக்கப்பட்டது என்று, அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.
மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய, பிரேத பரிசோதனைக்காக பாதிக்கப்பட்டவரின் உடல் செர்டாங் மருத்துவமனைக்கு இன்று அனுப்பப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை போலீசார் மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.










