டெங்கில், ஆகஸ்ட்டு 6:
மானிய விலைக்கு உட்படுத்தப்பட்ட பாக்கெட் சமையல் எண்ணெய் இணையம் மூலமாக விற்கப்படுவது குறித்து தமது தரப்பு விசாரணை மேற்கொள்ளும் என்று தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.
”இதுபோன்று இணையம் வழியாக பாக்கெட் சமையல் எண்ணெய் விற்க முடியுமா அல்லது முடியாதா என்பது குறித்து தமது, முதலாவதாக கே.பி.டி.என் தரப்பிடம் தெரிவிப்போம். இரண்டாவது, எந்தவொரு (விதிமுறை) மீறப்பட்டிருந்தால், மேல் நடிவடிக்கைக்காக நான் எம்.சி.எம்.சி தரப்புடனும் இத்தளத்தை உருவாக்கியவரையும் தொடர்புக் கொள்வேன்,” என்றார்.
மானிய விலை பாக்கெட் சமையம் எண்ணெய், அரசாங்கம் நிர்ணயித்த விலையைக் காட்டிலும் அதிக விலையில் இணையம் வழியாக அண்மையில் விற்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.









