ஹிரோஷிமா நகரம் நரகமாக மாறிய தினம்! வரலாற்றில் ஒரு கரும்புள்ளி

இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் மீது அணுகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட கொடூர நிகழ்வு நடந்து 78 ஆண்டுகளாகி உள்ளது. அந்த பேரழிவு ஏற்படுத்திய வடு இன்றும் ஆறவில்லை. கடந்த 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி காலை 08:15 மணி அளவில் அமெரிக்க நாட்டின் போர் விமானம் ‘லிட்டில் பாய்’ என்ற அணுகுண்டை ஹிரோஷிமா நகரம் மீது வீசியது.

ஹிரோஷிமாவில் மட்டும் 1.40 லட்சம் மக்களின் உயிரை பறித்தது. இந்த அணுகுண்டால், ஹிரோஷிமாவின் வெப்பநிலை சுமார் 4000 டிகிரியை எட்டியது. உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் எண்ணிக்கையை முறையாக கணக்கிடவே ஜப்பானுக்கு சில மாதங்கள் தேவைப்பட்டது.

இரண்டாம் உலகப் போர் 1939 இல் தொடங்கி 6 ஆண்டுகள் கடந்த பின்னரும் நிறுத்தப்படவில்லை. ஜப்பான் உலகின் சக்திவாய்ந்த நாடாக கருதப்பட்ட காலகட்டம் இது. இரண்டாம் உலகப் போரில், எதிரி நாடுகள் மீது ஜப்பான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி கொண்டிருந்தது.

இரண்டாம் உலக போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஜப்பான், இன்று மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உயர்ந்து முன்னேற்றம் கண்டுள்ளது. இதற்கெல்லாம் காரணம் அனைத்திலும் அந்த நாட்டு மக்களுக்கு இருக்கும் கடினமான உழைப்பு மற்றும் தேச பக்தியும் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here