10 வயது வளர்ப்பு மகள் துன்புறுத்தல்; 60 வயது மாது கைது

10 வயது சிறுமியை துன்புறுத்தியதாக நம்பப்படும்  பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். கோல லங்காட் மாவட்ட காவல்துறைத் தலைவர் அஹ்மத் ரித்வான் முகமட் நார் @ சலே கூறுகையில், 60 வயதுடைய பெண் தஞ்சோங் சிப்பாட்டில் உள்ள  வீட்டின் முன் ஒரு பெண்ணின் முடியைப் பிடித்து இழுப்பது போன்ற வைரலான காணொளியில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, இன்று அதிகாலை 12.10 மணிக்கு கைது செய்யப்பட்டதாகக் கூறினார்.

சந்தேகநபர் உள்ளூர்வாசி என்றும், சிறுமி தத்தெடுக்கப்பட்ட குழந்தை என்றும் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சிறுமி சிகிச்சைக்காக பந்திங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும், குழந்தைச் சட்டம் 2001 இன் பிரிவு 31(1)(a) இன் கீழ் அந்தப் பெண்ணை விசாரிக்க வேண்டும் என்றும் அஹ்மத் ரித்வான் கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here