பொருளாதாரத்தை உயர்த்த மலேசியா சரியான பாதையில் செல்கிறது -பிரதமர்

 

நாடு பொருளாதார முன்னேற்றத்தை நோக்கிய சரியான பாதையில் சென்றுகொண்டிக்கிறது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

சிரம்பானின் பரோய் விளையாட்டரங்கில் நேற்று (அகஸ்ட்டு 9) இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது, அவர் அவ்வாறு எடுத்துரைத்ததாக அரைத்து ஃபேஸ்புக் பக்கத்தில் அன்வார் பதிவிட்டுள்ளார்.

குறித்த நிகழ்ச்சியில் ஒற்றுமை அரசாங்கத்தின் கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

நாட்டின் முன்னேற்றம் தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் தற்போது மேற்கொள்வதாகப் பிரதமர் அன்வார் கூறினார்.

“வெளிப்படைத்தன்மை உட்பட இன, மத மற்றும் பிற கருத்துகளைப் பேசுவோர் நடைமுறையில் அதிலிருந்து மாறுபட்டவர்களாக இருக்கின்றனர். அத்தகையோரிடம் இருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும்.

“மக்களின் நம்பிக்கையைப் பெற்ற அரசாங்கம், நாட்டு மக்களின் உரிமைகளையும் பொருளியலையும் வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

எனவே, நாட்டின் நிலைத்தன்மையைக் கருத்தில்கொண்டு அனைத்து இனத்தவரும் ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவு தரவேண்டும் என்று அன்வார் கேட்டுக்கொண்டார்.

மலேசியப் பொருளாதார நிலையையும் மக்களின் உரிமைகளையும் வலுப்படுத்த ஒற்றுமை அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளை ஆதரிக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here