முஹிடினின் மருமகன் தவறு செய்யவில்லை என்றால் ஏன் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல வேண்டும்; ஜாஹிட் கேள்வி

முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசினின் மருமகன் குற்றவாளி இல்லை என்றால் ஏன் வெளிநாட்டிற்கு சென்றார் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி கேள்வி எழுப்பினார். மருமகன் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றதை விட அவர் மீதான குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று ஜாஹிட் கூறினார்.

அவர் குற்றவாளி இல்லை என்றால் ஏன் இப்படி பயந்து ஓடுகிறார்.. விசாரணையை எதிர்கொண்டு இதை நிரூபிக்க வேண்டும். நான் நீதிமன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறேன். நான் நீதிமன்ற விசாரணையில் கலந்து கொண்டேன். நான் நீதிமன்ற வழக்கை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். பிரதமர் கூட அதையே செய்கிறார். நாங்கள் ஓடிப்போகவில்லை என்று பாரிசான் நேஷனல் (BN) தலைவர் கூறினார்.

இன்று தோக் பாலியில் நடைபெற்ற ”Pemimpin Bersama Masyarakat Petumahan Nelayan’ என்ற நிகழ்வின் ஊடகவியலாளர் சந்திப்பில் ஜாஹிட் இதனைத் தெரிவித்தார். மேலும் அம்னோ பொதுச்செயலாளர் டத்தோ டாக்டர் அசிரஃப் வாஜ்டி மற்றும் மாநில அம்னோ தகவல் தலைவர் டத்தோ ஜவாவி ஓத்மான் ஆகியோர் உடனிருந்தனர். முஹிடினின் மருமகன் நாட்டை விட்டு வெளியேறியதால் அவர் சில குற்றங்களைச் செய்திருக்கலாம் என்று ஜாஹிட் கூறினார்.

அவர் உண்மையை எதிர்கொள்ள வேண்டும். மாமனார் ஒரு ‘சுத்தமான’ கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். எனவே அவர் தனது மருமகனை திரும்ப அழைக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார். தற்போது வெளிநாட்டில் இருக்கும் முஹிடினின் மருமகனைக் கண்டுபிடிப்பதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) இன்டர்போலின் உதவியை நாடலாம் என்ற அறிக்கை குறித்து ஜாஹிட் இன்று கருத்துத் தெரிவித்தார்.

முஹிடினின் மருமகன் முகமட் அட்லான் பெர்ஹான் (48) நாட்டிற்கு வெளியே இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாக எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார். அவர் எங்கிருக்கிறார் என்பதை எம்ஏசிசியால் இன்னும் வெளியிட முடியவில்லை என்றும், அட்லானின் பாஸ்போர்ட்டை முடக்க காவல்துறை மற்றும் குடிவரவுத் துறையுடன் இணைந்து செயல்படுவதாகவும் அவர் கூறினார்.

(மற்றும்) அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்த தகவல்கள் விரைவில் கிடைக்கவில்லை என்றால், அவரை சிவப்பு அறிவிப்பு பட்டியலில் சேர்க்க இன்டர்போலின் உதவியையும் நாங்கள் கேட்போம்” என்று அஸாம் கூறினார். திங்களன்று, MACC, ஒரு அமைச்சகத்தில் வெளிநாட்டுப் பணியாளர்களைப் பதிவு செய்தல், ஆட்சேர்ப்பு செய்தல் மற்றும் பயோமெட்ரிக் சேமிப்பு ஆகியவற்றில் ஊழல் மற்றும் சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணையில் உதவ இரண்டு பேரைக் கண்டுபிடித்து வருவதாக அறிவித்தது.

அட்லான் மற்றும் வக்கீல் மன்சூர் சாத் ஆகிய இருவரையும் அவர்களது வழக்கறிஞர்கள் மூலம் தொடர்பு கொள்ளும் முயற்சி தோல்வியடைந்தது. இருவரும் ஒத்துழைக்க மறுத்துவிட்டனர். எம்ஏசிசியின் கூற்றுப்படி, குடிவரவுத் துறையின் சோதனைகளில் இருவரும் முறையே மே 17 மற்றும் மே 21 ஆகிய தேதிகளில் மலேசியாவை விட்டு வெளியேறியதைக் கண்டுபிடித்தனர். இரு நபர்களும் இந்த நாட்டிற்குள் மீண்டும் நுழைந்ததற்கான எந்தப் பதிவும் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here