டாக்டர் ராமசாமியின் ராஜினாமா PH இன் பிரச்சாரத்தை பாதிக்காது – லோக்

ஜெலேபு, ஆகஸ்ட்டு 10:

முன்னாள் பினாங்கு துணை முதல்வர் II டாக்டர் பி. ராமசாமி DAPயில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது, ஒருபோதும் பினாங்கு மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானின் (PH) பிரச்சாரத்தை பாதிக்காது என்று, DAP கட்சியின் பொதுச்செயலாளர் அந்தோனி லோக் தெரிவித்துள்ளார்.

இம்முறை பினாங்கு தேர்தலில் வேட்பாளராக ராமசாமி போட்டியிடுவதிலிருந்து விடுபட்டதைத் தொடர்ந்து , அவர் இவ்வாறு செய்வார் என்று எதிர்பார்த்ததாக லோக் கூறினார்.

மூன்று முறை பினாங்கின் துணை முதலமைச்சராக பதவி வகித்தது உட்பட DAP கட்சியால் பல வாய்ப்புகளை பெற்ற தலைவர், வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக்கு கிடைக்காததால் இப்படி நடந்து கொண்டார் என எண்ணும் போது, அவர் நம்பிக்கை மீது வைத்த நாங்கள் ஏமாற்றமடைந்துள்ளோம்.

ஆனால் கட்சியின் போராட்டங்கள் தொடரும். தனிநபர்கள், (மற்றும்) தலைவர்கள் கட்சிக்குள் வந்து செல்கிறார்கள், இதற்கு காரணம் மிக முக்கியமானது கட்சி வலுவாக இருப்பதுதான். கட்சியை விட எந்த தனிமனிதனும் பெரியவனல்ல,” என்று இன்று கம்போங் சென்னாவில் நடந்த ‘‘Santai Minum Pagi Bersama Masyarakat’’ நிகழ்ச்சிக்குப் பிறகு, செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here