புத்ராஜெயாவில் அன்வாருக்கு ஆச்சரியமான பிறந்தநாள் கொண்டாட்டம்

புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் (PMO) தனது 76வது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக, வாக்குப்பதிவு நாளுக்கு முன்னதாக, பிரச்சாரத்தில் இருந்து  சற்று நேரம் ஓய்வு எடுத்துள்ளார் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்.  வியாழன் அன்று (ஆகஸ்ட் 10)  தொழுகையை தொடர்ந்து பிரதமர் அலுவலக ஊழியர்களுடன் பிரதமர் பல படங்களை டுவீட் செய்தார். இன்று எனக்கான அனைத்து பிரார்த்தனைகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

எனக்கு potluck வழங்கிய அலுவலக ஊழியர்களுக்கும் பாராட்டுக்கள். மீண்டும் ஒருமுறை நன்றி என்றார் பிரதமர். அன்வாரின் மனைவி டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிசா வான் இஸ்மாயிலும் அவரது ஆச்சரியமான பிறந்தநாள் கொண்டாட்டத்தின் வீடியோக்களை பகிர்ந்துள்ளார்.

இன்னொரு வருடம் கடந்துவிட்டது. அல்லாஹ் நம்மை நம்பிக்கை மற்றும் இறையச்சத்தில் mawaddah rahmah sakinah நிரப்புவானாக என்று அவர் டுவீட் செய்துள்ளார். இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மத், அன்வாருடன் “பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என அரிய பழைய படத்தைப் பகிர்ந்துள்ளார். பிறந்தநாள் வாழ்த்துக்கள் @anwaribrahim. இந்த புகைப்படம் 2005 இல் எடுக்கப்பட்டது. நான் லண்டனில் ஸ்காலர்ஷிப் மாணவனாக இருந்தேன். இது மதிப்புக்குரியது என்று அவர் டுவீட் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here