இளம் வாக்காளர்களின் முடிவில் சமூக ஊடகங்கள் செல்வாக்கு செலுத்தாது – டத்தோ நூருல் அமல்

 

பண்டார் பாரு, ஆகஸ்ட்டு 10 :

வரும் 12ஆம் தேதி நடைபெறவுள்ள மாநிலத் தேர்தல்களின் போது, இளைஞர்களுக்கான முக்கிய தகவல் ஆதாரமாகப் பயன்படுத்தப்படும் சமூக ஊடகத் தளம் அந்தந்த மாநிலத்தில் அரசியல் கட்சியைத் தேர்ந்தெடுப்பதில் செல்வாக்கு செலுத்தாது என்று, அம்னோவின் மகளிர் பிரிவு தலைவர், டத்தோ நூருல் அமல் முகமட் ஃபௌசி கூறினார்.

ஏனெனில் தற்போதுள்ள இளைஞர்கள் தகவல்களை மதிப்பிட்டு வாக்களிக்கும் அளவுக்கு புத்திசாலிகள் என்றும், “இந்த மாநிலத் தேர்தலில் வாக்களிக்க அவர்கள் சமூக ஊடகங்களை ஒரு அளவுகோலாகப் பயன்படுத்த மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்,” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here