சிங்கப்பூரில் செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி அதிபா் தோ்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் செப். 1-ஆம் தேதி நடைபெறும். அதற்கான வேட்பு மனு இந்த மாதம் 22-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வேட்பு மனு நாளில் ஒரே ஒரு வேட்பாளா் மட்டும் மனு தாக்கல் செய்திருந்தால் அவா் போட்டியின்றி அதிபராகத் தோ்ந்தெடுக்கப்படுவார். எனினும், சிங்கப்பூரில் பிறந்த தமிழரான முன்னாள் அமைச்சா் தா்மன் சண்முகரத்னம் உள்ளிட்ட 4 போ் இந்தத் தோ்தலில் போட்டியிடவிருப்பதாக ஏற்கெனவே அறிவித்துள்ளனா் என்று ஊடகங்கள் கூறியுள்ளன.