அழகி போட்டியில் திடீரென கழன்று வந்த பல்: உண்மையான அழகி நீங்கள்தான் என புகழாரம்

தாய்லாந்து நாட்டில் மிஸ் கிராண்ட் தாய்லாந்து 2026 என்ற அழகிப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்து கொண்ட போட்டியாளர் கமோல்வான் சனகோ மேடையில் தன்னை அறிமுகப்படுத்த வருகை தந்தார். அப்போது அவரின் செயற்கை பற்கள் திடீரென கழன்றது. நேரலையில் நடந்த இந்த சம்பவத்தை கண்ட நடுவர்களும் பார்வையாளர்களும் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. பலரும் அந்த போட்டியாளரான கமோல்வான் சனகோவை உண்மையான அழகி என்றும் புகழ்ந்தனர்.

காரணம், ஒரு மேடையில் அதுவும் மிகப்பெரிய நிகழ்வில் தான் பேச வந்தபோது நடைபெற்ற இந்த சம்பவத்தைக் கண்டு கமோல்வான் சனகோ கொஞ்சம் கூட பதற்றப்பட்டாமல் அமைதியாக அந்த சூழலை கையாண்டார். பற்கள் கழன்று விழுந்ததும் அவர் மேடையை விட்டு விலகி செல்வார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் கமோல்வான் சனகோ சில வினாடிகள் பின்னால் திரும்பி தனது பற்களை சரி செய்து பேச தொடங்கினார்.

இந்த சம்பவம் அவருக்கான பாராட்டுகளை பெற்று தந்துள்ளது. மேலும் கம்பீரமாகப் பேசி முடித்த அழகியின் தன்னம்பிக்கைக்கு சமூகவலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here