திரெங்கானுவில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் PAS வெற்றி பெற்றது – தேர்தல் ஆணையம்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 12 :

தேர்தல் ஆணையத்தின் (EC) அதிகாரப்பூர்வ தரவுகளின் அடிப்படையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்று திரெங்கானு மாநிலத் தேர்தலில் பாஸ் வெற்றி பெற்றது.

இரவு 10.20 மணி நிலவரப்படி, மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைப்பதற்கு திரெங்கானு மாநிலத்தில் மொத்தமுள்ள 32 இடங்களில் 24 இடங்களை பாஸ் கைப்பற்றியது.

முன்னதாக அறிவிக்கப்பட்ட முடிவுகளில் Ru Redang தொகுதியில் பாஸ் துணைத் தலைவரும், பராமரிப்பு மந்திரி பெசார்ருமான டத்தோஸ்ரீ அஹ்மட் சம்சூரி மொக்தார் 20,927 வாக்குகளைப் பெற்று, பக்காத்தான் ஹராப்பான் (PH) வேட்பாளர் சுஹைமி சுலைமானை (3,641 வாக்குகள்) தோற்கடித்தார்.

திரெங்கானு ஆடசியாளர் சுல்தான் மிசான் ஜைனால் அபிதீனின் ஒப்புதலைப் பெற்றபின்னர், கடந்த ஜூன் 28 அன்று திரெங்கானு மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here