முழுக்க முழுக்க மலேசியாவில் படமான வெற்றி நடிக்கும் ” லாக் டவுன் நைட்ஸ் “

 

முழுக்க முழுக்க மலேசியாவில் படமான வெற்றி நடிக்கும் ” லாக் டவுன் நைட்ஸ் “( Lock Down Nights ) S.S.ஸ்டான்லி இயக்யிருக்கிறார்.

ஷாம் நடிப்பில் வெளியான ” காவியன் ” படத்தை தயாரித்த 2m சினிமா வினோத் சபரீஷ் இப்படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளார். விரைவில் படம் வெளியாக இருக்கிறது.

Netflix ல் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட ” பூச்சாண்டி ” படத்தில் நாயகியாக நடித்த ஹம்ஷினி பெருமாள் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இசைஞானி இளையராஜாவின் சகோதரரும், இசையமைப்பாளர்,இயக்குனர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகம் கொண்ட கங்கை அமரன், மதியழகன், லோகன் மற்றும் கோமளா நாயுடு ஆகியோர் முக்கிய கதாபாத்திரதில் நடித்துள்ளனர்.

பிரபல ஒளிப்பதிவாளர் சாலை சகாதேவன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார், அத்தோடு இசையமைப்பாளர் ஜெஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

ஏப்ரல் மாதத்தில், புதுக்கோட்டையிலிருந்து சரவணன் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய S.S.ஸ்டான்லி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார்.

இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் மலேசியாவில் நடைபெற்றது.

தற்போது இந்த படத்தின் டைட்டில் லுக்கை இசையாமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டணி வெளியிட்டார். அது தற்போது இணைய தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here