செந்தோசா சட்டமன்ற தொகுதியில் குணராஜ் அபார வெற்றி

பி.ஆர்.ஜெயசீலன்

கிள்ளான், ஆக.14 –

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கோத்தாராஜா நாடாளுமன்றத்திற்குட்பட்ட செந்தோசா சட்டமன்றத் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக களம் இறங்கிய டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் அதிகப் பெரும்பான்மை வாக்குகளில் வெற்றிப்பெற்றார்.

பக்காத்தான் ஹராப்பான், பெரிக்காத்தான் நேஷனல், மூடா, பிஆர்எம் கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிட்டதில் நான்கு முனைப்போட்டியை எதிர்நோக்கிய குணராஜ் 46,250 வாக்குகள் பெரும்பான்மையில் இத்தொகுதியை இரண்டாம் தவணையாக தக்க வைத்துக் கொண்டார். அவருக்குக் கிடைத்த மொத்த வாக்குகள் 54,430. பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் பரமேஸ்வரன் கணேசன் பெற்ற வாக்குகள் 8,180 மூடா கட்சியின் தனுஷா டீச்சர் 2,339 வாக்குகளும் பிஆர்எம் கட்சியைச் சேர்ந்த வ.ரவிசந்திரன் 156 வாக்குகளும் பெற்றனர்.

இந்த வெற்றியை செந்தோசா தொகுதி மக்களுக்கே தாம் சமர்ப்பிப்பதாக குறிப்பிட்ட குணராஜ், இந்த அபார வெற்றிக்கு தம்மோடு சேர்ந்து கடுமையாக உழைத்த பக்காத்தான் ஹராப்பான் தொண்டர்களுக்கும் மஇகா, அம்னோ, அமானா, ஐபிஎஃப், அரசு சாரா இயக்கங்கள், குடியிருப்பாளர் சங்கங்கள் தனிநபர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here