மஞ்சோங்கில் 90 சட்டவிரோத குடியேறிகள் கைது

ஈப்போ, அகஸ்ட்டு 13:

கடந்த ஆகஸ்ட் 11 அன்று, மஞ்சோங்கில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பேராக் மாநில குடிநுழைவுத் துறை மேற்கொண்ட சோதனையில் சட்டவிரோதமாக குடியேறிய 90 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சோதனையில் குழந்தைகள் உட்பட 104 பேரை ஆய்வு செய்த பின்னர்குறித்த 90 பேரும் கைது செய்யப்பட்டதாக அதன் இயக்குனர் ஹப்ட்சன் ஹுசைனி தெரிவித்தார்.

“கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு தொடங்கிய ஆறு மணி நேர நடவடிக்கையில், 62 ஆண்கள், 23 பெண்கள் மற்றும் ஐந்து குழந்தைகள் ஆகியோர், செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லாதவர்கள் மற்றும் காலாவதியான பணி கடவுச்சீட்டுகள் இல்லாத காரணங்களுக்காக கைது செய்யப்பட்டனர் என்று, அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அவர்களில் 66 இந்தோனேசியர்கள், வங்காளதேசத்தைச் சேர்ந்த 14 பேர், மியன்மாரைச் சேர்ந்த 5 பேர், நேபாளம் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த தலா இருவர் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் ஆகியோர் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here